திருத்தணியில் வழங்கிய பொங்கல் தொகுப்பில் இறந்து கிடந்த பல்லி: மக்கள் அதிர்ச்சி

திருத்தணியில் வழங்கிய பொங்கல் தொகுப்பில் இறந்து கிடந்த பல்லி: மக்கள் அதிர்ச்சி
X

புளியில் இறந்து கிடந்த பல்லி.

திருத்தணியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் இருந்த புளியில் இறந்து கிடந்த பல்லியால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி திருக்குளம் பகுதி நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த நியாய விலைக் கடையில் 21 பரிசு பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை அப்பகுதியைச் சேர்ந்த நந்தன் என்பவர் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது புளியில் இறந்த நிலையில் பல்லி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நியாயவிலைக்கடை விற்பனையாளரிடம் புகார் செய்தும் அவர் அலட்சியப்படுத்தியதாக வேதனையை வெளிப்படுத்தினார். பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வாழங்கிவரும் வீட்டு உபயோகப் பொருட்களில் பல்லி இறந்த நிலையில் கண்டறியப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!