மாமியார் வீட்டின் முன் மருமகள் தர்ணா, கணவனை மீட்க போராட்டம்

மாமியார் வீட்டின் முன் மருமகள் தர்ணா, கணவனை மீட்க போராட்டம்
X
பைல் படம்
திருத்தணி அருகே கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பெட்ரோல் கேனுடன் மாமியார் வீட்டின் முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தை சார்ந்தவர் தினேஷ். இவர், சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் அரக்கோணம் பகுதியை சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஆனந்தி 2 மாதங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இரு குடும்பத்தாரும் எடுத்த சமாதான முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் தினேஷ் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகக் தெரிகிறது.

இதனையடுத்து கணவர் வீட்டிற்கு வந்த ஆனந்தி கையில் பெட்ரோல் கேனுடன் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் கணவருடன் சேர்ந்து வாழ மாமனார் மாமியார் தடையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து புகார் அளிக்க அறிவுறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!