திருத்தணியில் குற்றங்களை தடுக்க வேண்டும்: எஸ்.பி வருண்குமார் அறிவுறுத்தல்

திருத்தணியில் குற்றங்களை தடுக்க வேண்டும்: எஸ்.பி வருண்குமார் அறிவுறுத்தல்
X

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் (பைல் படம்)

திருத்தணியில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்க வேண்டும் என போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி வருண்குமார் அறிவுறுத்தினார்.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்சுமார் 10 நாட்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்றார். இந்த நிலையில் நேற்று எஸ்பி வருண் குமார் திருத்தணி காவல் நிலையத்திற்கு நேரில் வந்தார்.

அப்போது திருத்தணி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் எஸ்பியை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து எஸ்பி காவல் நிலையத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தார்.

பின் முதல் மாடியில் இயங்கிவரும் குற்றப்பிரிவு நிலையத்திற்கு சென்று அங்குள்ள ஆவணங்களை சரிபார்த்தார். இதனையடுத்து வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் கஞ்சா கடத்தல் மற்றும் திருடர்களை தடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு வலியுறுத்தினார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்