நீதிமன்ற ஊழியர் மர்மமான முறையில் உயிரிழப்பு

நீதிமன்ற ஊழியர் மர்மமான முறையில் உயிரிழப்பு
X

பள்ளிப்பட்டு அருகே  வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து போன சிலம்பரசன். 

Court Employee Death Police Enquiry திருத்தணி அருகே சென்னை உயர்நீதிமன்ற ஊழியர் வீட்டில் மர்மமான முறையில் பலத்த வெட்டு காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Court Employee Death Police Enquiry

பள்ளிப்பட்டு அருகேஉடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் நீதிமன்ற ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.போலீசார் தீவிர விசாரணை. மனைவி வீட்டுக்குள் இருக்கும்போது வெட்டு காயங்களுடன் இருப்பதாக கூச்சலிட்டதால் சந்தேகம். கதவை உடைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றபோது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரி காலனியை சேர்ந்த சின்னப்பையன் என்பவரின் மகன் சிலம்பரசன் ( வயது 35). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் டைப்பிஸ்டாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.சம்பவத்தன்று மாலை வீட்டில் சிலம்பரசன் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக மனைவி கூச்சலிட்டார்.

அப்போது அதனைப் பார்த்த அக்கம் பக்கததினர் கதவை உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று சிலம்பரசனை மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிலம்பரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொதட்டூர்பேட்டை போலீசார் சிலம்பரசன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து சிலம்பரசன் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி வீட்டுக்குள் இருக்கும்போது கை கழுத்து போன்ற இடங்களில் பலத்த வெட்டு காயங்கள் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த சிலம்பரசனின் மனைவி கோமதி செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!