கொரோனா வைரஸ்: திருத்தணி போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்

கொரோனா வைரஸ்: திருத்தணி போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்
X
திருத்தணியில் முக கவசம், சமூக பாதுகாப்பு, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காவல் துறையினர் பிரச்சாரம்.

திருத்தணியில் முக கவசம் அணிவதன் அவசியம், சமூக பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும் எனபது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற காவல் துறையினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கொரோனா ஒமிகிரான் பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அனைவரும் முககவசம் கட்டாயம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வருண்குமார் உத்தரவின் பேரில் திருத்தணி நகரில் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் கொரோனா வைரஸ் படத்துடன் திருத்தணி இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ம.பொ.சி.சாலை சுந்தரவிநாயகர் கோவில் அருகே, முககவசம் அணியாமல் நடந்து வந்தவர்கள் மற்றும் வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி முககவசம் வழங்கினார். கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவியுள்ளதால் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என காவல் ஆய்வாளர் ரமேஷ் பொது மக்களிடையே கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!