திருவாலங்காடு ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு பொது மக்கள் ஏமாற்றம்

திருவாலங்காடு ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு  பொது மக்கள் ஏமாற்றம்
X

கொரோனா தடுப்பூசி பைல் படம்

திருவாலங்காடு ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிரமப்பட்டு வருகின்றனர்.

திருவலங்காடு ஒன்றியத்தில் உள்ள பூனிமாங்காடு, கனகம்மாசத்திரம் திருவலங்காடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று முதல் சில நாட்களாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது.

இது குறித்து தடுப்பூசி செலுத்தவந்தவர்கள் கூறியதாவது, தடுப்பூசியை செலுத்த வருபவரிடம் மொபைல் எண் வாங்கி கொண்டு தடுப்பூசி வந்ததும் அழைப்பதாக மருத்துவமனையில் கூறுகின்றனர்.

தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதால் விரைவில் தடுப்பூசி அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் பிரசன்னா கூறியிருப்பதாவது, 4 நாட்களாக தடுப்பூசி எங்களுக்கு வரவில்லை எனவும் கர்ப்பிணி, பாலூட்டும் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதால் தடுப்பூசி அதிகம் கொடுத்தால் தட்டுப்பாடு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story
future of ai in retail