கொரோனா விழிப்புணர்வு வார நிறைவு விழா: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

கொரோனா விழிப்புணர்வு வார நிறைவு விழா: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
X

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு வார நிறைவு விழா பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு வார நிறைவு விழா பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதன் நிறைவு விழா நேற்று திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரகாட்டம் முதலான ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் எம் பூபதி, திருவள்ளூர் மாவட்ட கழக உறுப்பினர் இ.கே.உதயசூரியன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவர்கள் , பொதுமக்கள், ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture