தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல்: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

Tobacco In Tamil | Tobacco News
X

பைல் படம்.

Ration News Today- திருத்தணி அருகே தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தியதாக குண்டர் சட்டத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Ration News Today- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் கிராமத்தில் வசித்து வரும் சரவணன் (31). இவர் கடந்த 6 மாதங்களாக ஆந்திராவுக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக . இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் புலனாய்வு துறை வழக்குப்பதிவு செய்து, சரவணனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் சென்னை மண்டல காவல் கண்காணிப்பாளர் கீதா பரிந்துரை செய்தார்‌. இதன்படி, சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா