புதிய வீட்டில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: போலீசார் விசாரணை

புதிய வீட்டில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

புதிய வீட்டில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி -சித்தூர் சாலையில் பல்லவன் வங்கி அருகில் இதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இந்த வீட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்த வேலூர் மாவட்டம், அம்முர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் வயது(30) மது அருந்திவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெட்ரோல் பங்கு அதிபர் விஜய் வீட்டுக்கு சென்றபோது தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததுஉ உடனடியாக திருத்தணி போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். போலீசார் இறந்து போன மணியின் பிரேதத்தை கைப்பற்றி மது அருந்திவிட்டு இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்