திருத்தணியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள்

திருத்தணியில்  மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள்
X

திருத்தணியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி கடத்த சில நாட்களாக நடைபெறுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரின் முக்கிய சாலைகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் வடிக்கால் வாய்கள் அமைக்கும் பணி கடத்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக சித்தூர் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் பயணிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

வாகன நெரிசலை சரி செய்ய போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாததால் நீண்ட நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனை அடுத்து வாகன ஓட்டிகள் இறங்கி போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்‌. இதனைத் தொடர்ந்து வாகனங்கள் மெதுவாக சென்றன. சாலைகளில் அனைத்து வாகனங்களும் நின்றதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருத்தணி அண்ணா பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்துகளுக்காக காத்திருந்த பயணிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.





Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil