திருத்தணியில் உடல் உறுப்பு தானம் செய்த மூதாட்டியின் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி

திருத்தணியில் உடல் உறுப்பு தானம் செய்த மூதாட்டியின் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி
X

மூதாட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர்.

திருத்தணியில் உடல் உறுப்பு தானம் செய்த 60 வயது மூதாட்டியின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

திருத்தணி அருகே உடல்நிலை குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த மூதாட்டியின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் நாகரத்தினம் (60 வயது) மூதாட்டி இவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் திருத்தணி திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் மூளைச் சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது உறுப்புகள் உறவினர்கள் அனுமதியோடு தானம் செய்யப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் உடல் உறுப்பு தானம் செய்த நாகரத்தினம் உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபு சங்கர், நாகரத்தினம் வீட்டிற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் தீபா, வட்டாட்சியர் மதன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!