சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
X

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்பாடி காலனியை சேர்ந்த இந்திராணி என்ற மூதாட்டி இன்று காலை கிராமத்திற்கு அருகில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடக்க முயன்றபோது திருப்பத்தூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற டெம்போ ட்ராவல் வேன் மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு இறந்த மூதாட்டியின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னை திருப்பதி தேசிய கொல்கத்தா நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு திருத்தணி போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் 1 மணி நேர போராட்டம் நீடித்ததால், 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து முடங்கியது.

இருப்பினும் சாலைமறியலை கைவிட கிராமமக்கள் முன்வராததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இறந்த மூதாட்டியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து, மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business