பள்ளிப்பட்டு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற சந்திரன் எம்எல்ஏ

பள்ளிப்பட்டு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற சந்திரன் எம்எல்ஏ
X

பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும் மாவட்ட  திமுக செயலாளர் சந்திரன் எம் எல் ஏ.

பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன் எம் எல் ஏ. பங்கேற்றார்.

திருத்தணி அருகே பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்த பொது உறுப்பினர் கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் பங்கேற்றார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் சி.ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் திருமலை லோகநாதன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் ராஜேஸ்வரி ரவீந்திரநாத் , ம.கிரண், பொன்.சு. பாரதி,மணிமேகலை மகேந்திரன், ஐயப்பா செங்கைய்யா, முத்து , ஆஞ்சநேயன் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் வருகின்ற 2026 ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி மீண்டும் கழக தலைவர் அவர்களை முதலமைச்சராக அரியணை ஏற வைப்போம். கழக அரசின் சாதனைகளை சுவர் விளம்பரம் செய்து பொதுமக்களிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கழக இளைஞரணி உறுப்பினர்களை ஒவ்வொரு கிளைகளிலும் அதிக அளவில் சேர்த்திட வேண்டும். நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிளைக் கழகங்களில் கூட்டங்களை நடத்திட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் பி.டி.சந்திரன், சிஜே.செந்தில் குமார், திருமலை லோகநாதன், தலைமைக் கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் டி.எம் சுகுமாரன், முரளிசேனா, இ.கே. உதயசூரியன், சித்திக் அலி, வெங்கட பெருமாள், தண்டபாணி, ரவி, பத்மநாபன், ஜெகதீசன், கமலநாதன், சுபான், எம்.ஹரி, ஆர்.முரளி, கேசவன், மனோகரன், ஜானகிராமன், புரேந்தர், சாமுண்டீஸ்வரி, முடிவில் பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் கலில், சந்திரபாபு, பிரபு ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
டிசம்பர் இறுதி... சூரிய பெயர்ச்சி...இந்த 3 ராசிக்கும் ஜாக்பாட்தான்..!