பேருந்துக்காக காத்திருந்த இளைஞரிடம் செல்போன், பணம் பறிப்பு.!

பேருந்துக்காக காத்திருந்த இளைஞரிடம் செல்போன், பணம் பறிப்பு.!
X
பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற திருடன்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் உதய் (23). இவர் நேற்று காலை 8 மணி அளவில் பேருந்துக்காக காத்து கொண்டு இருந்த போது அவ்வழியாக வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர், உதய்யை கத்தியை காட்டி மிரட்டி பையில் இருந்த பணத்தைக் கொடு, செல்போனை கொடு என தகாத வார்த்தைகளால் மிரட்டியுள்ளார்.

கொடுக்க முடியாது என்று தகராறில் ஈடுபட்ட போது பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் 2500 ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு ஓடியுள்ளார். இதுகுறித்து திருத்தணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!