திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
X

கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கார்.

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் கட்டுப்பாடின்றி ஓடிய கார் விபத்து.

திருவள்ளூர் மாவட்டம். திருத்தணி முருகன் கோயில் மலைமேல் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் காவடி எடுத்துக்கொண்டு மலைக்கோவிலுக்கு வந்தார். காரில் 10 பேர் இருந்தனர். சாமி தரிசனம் முடிந்து அவர்கள் இரவு கோவிலில் இருந்து வெளியே வந்து காரில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தனர்.

இந்த காரை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மலை அடிவாரத்தை நோக்கி வேகமாகச் சென்றது. இந்த காரை ஓட்டுநர் சுரேஷ் கட்டுக்குள் கொண்டுவர முயன்றும் முடியவில்லை. அதனால், அங்கு இருந்த இரும்பு வேலிகளை உடைத்துக்கண்டு கார் மேலும் வேகமாக மலைப்பாதையில் பிரதான சாலையை நோக்கி ஓடியது.

செய்வதறியாது திகைத்த சுரேஷ் , கீழ்ப்பகுதியில் கோவில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஓம் முருகா பெயர் பலகையின் மீது மோதி நின்றது. இதில் காரின் முன்பக்கம் உடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!