திருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி பலி

திருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி பலி
X
திருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் மீன் வியாபாரத்திற்கு சென்ற கணவன், மனைவி உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(46). இவரது மனைவி வளர்மதி(41). இருவரும் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மீன் வியாபாரத்திற்காக சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பீரகுப்பம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்த கார் ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரமேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த வளர்மதி உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் ரமேஷ் உடலை கைப்பற்றி, அவரது மனைவி வளர்மதியை அருகிலுள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் வளர்மதிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி வளர்மதி உயிரிழந்தார். கணவன், மனைவி இரண்டு பேரும் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்திற்கு காரணமான தப்பிச்சென்ற கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா