மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி... மற்றொரு சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி
திருத்தணி அருகே காசிநாதபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனைகளை செய்தும் மாத்திரை மருந்துகள் என வழங்கினர்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே காசிநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மாலா, தேவகுமார் (7) எழில் இனியா(2) இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 8.-ஆம் தேதி அன்று தம்பதியினர் மூத்த மகன் தேவகுமாருக்கு திடீர் காய்ச்சல் வந்துள்ளது. சிறுவனை பெற்றோர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும். காய்ச்சல் குறையாததால், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி தேவகுமார் உயிரிழந்தார்.
இதனை அடுத்து இத்தம்பதிக்கு எழில் இனியா என்கின்ற இரண்டு வயது சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பெற்றோர்கள் சிறுவனை கொண்டு சென்று திருத்தணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.அங்கு சிறுவனுக்கு ரத்த பரிசோதனை செய்தனர். ரத்தப் பரிசோதனையில் எழில் இனியாவிற்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்தனர். முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்து. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை அறிந்த மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் செல்வகுமார், மற்றும் துணை இயக்குனர் ஜவஹர்லால் ஆகியோரின் உத்தரவின் பேரில், திருத்தணி அடுத்த பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கோபி கிருஷ்ணா தலைமையில் பத்துக்கு மேற்பட்ட மருத்துவர்கள் 25.க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள் என பலரும் காசிநாதபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனைகளை செய்தும் மாத்திரை மருந்துகள் என வழங்கினர்..
கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக தேவையில்லாத பிளாஸ்டிக், டயர் உள்ளிட்ட தேவையில்லாத பொருட்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறதா அதில் கொசுக்கள் உற்பத்தி ஆகி உள்ளதா என சோதனை செய்து தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தி. அப்பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் தூவி கண்காணித்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தரத்தை சோதனை செய்து அப்பகுதியில் முகாமை ஏற்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu