அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
X
Basic Amenities Demanded Agitaition திருத்தணி அருகே பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Basic Amenities Demanded Agitaition

திருத்தணி அருகே பழங்குடி இன மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த செருக்கனூர், கோரமங்கலம், பெரிய கடம்பூர், வி.கே.ஆர் புரம், நல்லாடூர், உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் மேற்கண்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் கூலி தொழில் நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். நிலையில் இவர்களுக்கு தேவையான வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி, சுடுகாட்டிற்கு செல்ல சாலை, பகுதிநேர நியாய விலை கடை உள்ளிட்டவை அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பலமுறை திருத்தணி வருவாய் துறையினரை சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழங்குடி இன மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி திருத்தணி தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு தாலுகா அலுவலக வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருத்தணி ஆர்டிஓ தீபா தாசில்தார் மதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர் அதில் ஒரு மாதத்திற்குள் இந்தப் பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!