திருத்தணியில் விளையாட்டில் வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

திருத்தணியில் விளையாட்டில் வென்ற  அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
X

திருத்தணி வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர் ஆரிசியர் கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Thiruttani -திருத்தணியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Thiruttani -திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 14,17,19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற விளையாட்டு போட்டிகளில் கபடி, கைப்பந்து, ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில், கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலைப் பள்ளி சார்பில் பங்கேற்ற மாணவ, மாணவியர் 20க்கும் மேற்ப்பட்டோர் வெற்றி பெற்று பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றனர். மேளும் 7 மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற உள்ள விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் சிறப்பாக செயல்ப்பட்ட மாணவ, மாணவியருக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியை ரேணுகா தேவி, உதவி தலைமை ஆசிரியர் மூர்த்தி, எஸ்.எம்.சி தலைவி நிரோசா ஆகியோர் நினைவு பரிசு வழங்கி வெகுவாக பாராட்டினர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story