'தலைவர் தளபதி உணவகம்' என்ற பெயரில் 1000 பேருக்கு அன்னதானம்
திருத்தணியில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து உணவின்றி தவிப்பவர்களுக்கு தலைவர் தளபதி உணவகம் என்ற பெயரில் நடமாடும் வாகனத்தில் 1000 பேருக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம். பூபதி ஏற்பாட்டில் திருத்தணி மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏழை, எளிய மக்கள் அன்றாட கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்கள். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அன்றாட உணவிற்கே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி ஏற்பாட்டில் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தலைவர் தளபதி உணவகம் என்ற பெயரில் காலை 11 மணி முதல் 2 மணி வரை இலவச உணவு வழங்கப்பட்டது.
அதன்படி இன்று புளி சாதம், தயிர் சாதம், முட்டை, ஆப்பிள் ஆரஞ்சு மற்றும் சிக்கன் குழம்பு ஆகியவை வழங்கப்பட்டது. திருத்தணியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து திருத்தணி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் உள்ள 1000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தலைவர் தளபதி நடமாடும் வாகனம் மூலம் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உணவு வழங்கிட நடமாடும் வாகனத்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu