/* */

போதிய இட வசதியின்றி வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம்: மாணவர்கள் தவிப்பு

அக்ரஹாரம் அங்கன்வாடி மையம் போதிய வசதி இன்றி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் மாணவர்கள் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

HIGHLIGHTS

போதிய இட வசதியின்றி வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம்: மாணவர்கள் தவிப்பு
X

அங்கன்வாடி மையம்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் எஸ் அக்ரஹாரம் கிராமத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வந்த நிலையில், இந்த அங்கன்வாடி மையத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பழைய கட்டிடம் என்பதால் குழந்தைகளின் நலனை கருதி கட்டிடத்தை இழுத்து மூடி அதே பகுதியில் சிறிய வாடக கட்டிடத்தில் போதிய வசதியின்றி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் அரசு குழந்தைகள் உணவுக்காக வழங்கும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் சத்துணவு மாவு உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளதால் குறைந்த இடத்தில் மாணவர்கள் அமர்ந்து படிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் திறந்த வெளியில் மாணவர்கள் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்களும் குழந்தைகளின் பெற்றோர்களும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வாடகை கட்டிடத்தில் கழிப்பறை இல்லாததால் குழந்தைகள் மிகவும் தவித்து வருகின்றனர்.

எனவே குழந்தைகளின் நலனை கருதி மாவட்ட நிர்வாகம் பழைய பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்களும் கிராம பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 4 March 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  2. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  3. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  4. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  6. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  7. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  9. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  10. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு