திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திர அமைச்சர் நடிகை ரோஜா சுவாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திர அமைச்சர் நடிகை ரோஜா சுவாமி தரிசனம்
X

திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திர அமைச்சர் நடிகை ரோஜா தனது கணவருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருத்தணியில் நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

திருத்தணியில் சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜா ஆந்திர மாநில முதல்வராக மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி வரவேண்டும் என்பதற்காக வெள்ளி வேல் காணிக்கையாக வழங்கினார்.

திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பிரபல நடிகையும் ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜாவும் கணவரும் பிரபல இயக்குனருமான செல்வமணியுடன் இன்று சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது ஆந்திர மாநில முதல்வராக மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி வரவேண்டும் என்ற தனது வேண்டுதலை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளி வேலை காணிக்கையாக வழங்கிவிட்டு சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆந்திர மாநிலத்திற்கு நல்லது செய்பவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாகவும், யாருடனும் கூட்டணி அமைத்து போட்டியிட போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக மட்டுமே ஜாமீனில் வந்திருப்பதாகவும் மீண்டும் 21ஆம் தேதிக்குள் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்றார்.

பல்வேறு சாட்சிகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாகவும் இதுவரை 18 முறை தடை ஆணை உத்தரவு வாங்கி வெளியே இருந்ததாகவும் தற்போது தண்டனை கொடுக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பலமான மக்கள் நேசிக்கிற தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி இருப்பதால் தவறு செய்தவர்களுக்கும் ஊழல் செய்பவர்களுக்கும் கஷ்டமாக தான் இருக்கும் என்றார்.


மேலும் சினிமா துறையில் இருந்து தான் அரசியலுக்கு வந்திருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்து தான் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பதாகவும் தன்னை எதிர்க்க முடியாமல் தான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு பெண் என்றும் பார்க்காமல் தன்னுடைய கேரக்டரை பற்றி சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

தனி நபர் விமர்சனத்தை எந்த ஒரு ஆணும் பெண்ணும் ஏற்க மாட்டார்கள், செருப்பால்தான் அடிப்பார்கள் என்று கடுமையாக சாடினார். தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சிகளை மக்கள் ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள். நாளை ஆட்சிக்கு வந்தாலும் என்ன செய்யப் போகிறேன் என்பதையும் அவர்கள் சொல்வதில்லை. எந்நேரமும் ஜெகன்மோகன் ரெட்டியை திட்டுவதையே சந்திரபாபு நாயுடு வாடிக்கையாக வைத்திருப்பதாகவும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதால் பொதுமக்கள் ஜெகன்மோகன் ரெட்டி மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பதாகவும் அதனால்தான் அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதாக தெரிவித்தார். ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தன் வளர்ச்சி பொறுக்க முடியாமல் தொந்தரவு செய்வதாகவும் ரோஜா மேலும் தெரிவித்தார்.

Tags

Next Story
உஷார் மக்களே!..இந்த அறிகுறிகள் இருந்தா இரைப்பைல புற்றுநோய் இருக்குன்னு அர்த்தமாம்..!             உடனேஅதை செக் பண்ணிக்கோங்க!..