திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னிட்டு தெப்ப திருவிழா: அமைச்சர் நாசர் துவக்கி வைப்பு
திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னிட்டு கோவில் குளத்தில் தெப்ப திருவிழாவை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.
Aadi Krithigai - திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று முதல் நாள் தெப்ப திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 7 மணி அளவில் காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி வலம் வந்தது. இதனையடுத்து படிக்கட்டுகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக சுவாமி எடுத்து சென்று சரவணப்பொய்கையில் குளத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சி முன்னதாக திருத்தணி கோவிலில் 4 நாட்களில் நடைபெறும் ஆடி கிருத்திகை நிகழ்ச்சியில், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் மற்றும் ஆந்திரா புதுச்சேரி தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர்.
பக்தர்களுக்கு பாதுகாப்பு பணிகளையும் அதன் ஏற்பாடுகளையும் நேரில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிகள் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார். திருத்தணி கோவில் அடிவாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவினை முன்னிட்டு திரை இசையில் பாரதி என்ற மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் நேரலையில் ஒளிப்பரப்பப்படுவதை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரடியாக பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திருத்தணி எம்.பூபதி, திருத்தணி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், திருத்தணி நகர் மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜே.அஸ்வத் பேகம், அறநிலையத்துறை கூடுதல் இயக்குநர் திருமகள், துணை ஆணையர் செயல் அலுவலர் விஜயா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கூ.பாபு, திருத்தணி நகர மன்ற துணைத் தலைவர்கள் ஆ.சாமிராஜ், சி.சு.ரவிச்சந்திரன், பூவை நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, ஒன்றியச் செயலாளர் சி.ஜெ.சீனிவாசன், எஸ்.மகாலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், மு.நாகன், பொன்.விமல், ப.ச.கமலேஷ், ஜெ.சுதாகர், கே.ஜி.ஆர்.ராஜேஷ்குமார், கே.வி.ஜி.உமாமேஸ்வரன், ஆ.பவளவண்ணன், பூங்கநகர் தியாக, ஆர்.திலீபன், அரசு அலுவலர்கள் இந்து அறநிலை துறை அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu