திருத்தணி அருகே பிறந்தநாளில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞர் கைது

திருத்தணி அருகே பிறந்தநாளில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞர் கைது
X

விஷ்ணு

Tirunelveli Knife-திருத்தணி அடுத்த வேலஞ்சேரியில் பிறந்தநாளில் பட்டா கத்தியால் இளைஞர் கேக் வெட்டும் வீடியோ வைரராகியுள்ளது.

Tirunelveli Knife-திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகன் விஷ்ணு (24). ஊரை சுற்றும் வாலிபனான விஷ்ணு கடந்த மாதம் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது பட்டாகத்தியால் கேக்கை வெட்டி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடும் வீடியோ இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வைரலானது.

இதனையடுத்து திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விஷ்ணுவை தேடி வந்தனர்.

இந்நிலையில் வேலஞ்சேரியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று விஷ்ணுவை கையும் களவுமாக கைது செய்தனர்.

பின்னர் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கிளை சிறையில் அடைத்தனர். பிறந்தநாளில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!