திருத்தணி அருகே தேள் கடித்ததில் உயிரிழந்த பள்ளி மாணவன்

திருத்தணி அருகே தேள் கடித்ததில் உயிரிழந்த பள்ளி மாணவன்
X

கொடிய விஷம் கொண்ட கருந்தேள் (கோப்பு படம்).

திருத்தணி அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தேள் கடித்ததில் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

திருத்தணி அடுத்த பொன்னாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரதன். இவரது மகன் ஜோதிராமன். இவன் அரசு பள்ளியில் 6-வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் இவன் தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது தேள் கடித்ததில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இதுபற்றி திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அடுத்த பொன்னாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி தசரதன் இவரது மகன் ஜோதி ராமன் (வயது11) இதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 6-வகுப்பு படித்து வந்தான். இவன் தனது வீட்டு அருகே சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று இவரை கடும் விஷம் கொண்ட கருந்தேள் கடித்துள்ளது.

ஆனால் இதனை பொருட்படுத்தாமல் மாணவன் விளையாடிவிட்டு கடித்தது தேள் என்று தெரியாமல் இவரது வீட்டில் தாய், தந்தையிடம் தேள் மாதிரி ஒன்று தன்னை கடித்துள்ளது அதனால் தனக்கு மயக்கம் வருகிறது என்று கூறியுள்ளான்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் தந்தை உடனடியாக மாணவனை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்று சேர்த்தனர்.

ஆனால் அங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவன் ஜோதி ராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடும் விஷம் கொண்ட கருந்தேள் கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு