திருத்தணி அருகே வெந்நீரில் தவறி விழுந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருத்தணி அருகே வெந்நீரில் தவறி விழுந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
X

பைல் படம்.

திருத்தணி அருகே வெந்நீரில் தவறி விழுந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கோதண்டராமபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சார்லஸ். இவருக்கு 4 வயதில் ஹேமா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி சார்லஸ் வீட்டில் குளிப்பதற்கு வெந்நீர் வைத்துள்ளார். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஹேமா எதிர்பாராத விதமாக சுடு தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்ததில் இதனை கண்ட ஹேமாவின் தந்தை சார்லஸ் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார் . பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை ஹேமா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!