திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு

திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
X

பைல் படம் : ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம் போலீசார் தீவிர விசாரணை

திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே சானாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு இவர் பெங்களூருவில் ஒரு தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கிராமத்திற்கு அருகில் சுகன்யா குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைத்து கொண்டிருந்தனர். அப்போது சுகன்யாவுடன் கோயிலுக்கு சென்றிருந்த அவரது இளைய மகன் சாய் (வயது 9) நீச்சல் பழக்க கேட்டுக் கொண்டதால் சாயின் இடுப்பில் துணியால் பிளாஸ்டிக் கேன் கட்டி கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உதவியுடன் நீச்சல் பயின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இடுப்பு பகுதியில் கட்டியிருந்த கேன் அவிழ்ந்ததில் சிறுவன் நீரில் மூழ்கினார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி சிறுவனை பிணமாக மீட்டனர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அருகே கிணற்றில்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!