திருத்தணியில் பொது இடங்களில் மது அருந்திய 60 பேர் கைது

திருத்தணியில் பொது இடங்களில் மது அருந்திய 60 பேர் கைது
X

திருத்தணியில் கைது செய்யப்பட்ட குடிமகன்கள்.

திருத்தணியில் பொது இடங்களில் மது அருந்தியதாக 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகர் பகுதியில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளிலிருந்து மது வாங்கிக்கொண்டு பொது இடங்களில் அமர்ந்து உல்லாசமாக மது அருந்தி வருகின்றனர்.

அப்போது அவ்வழியாக சென்றுவரும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதியோர் சென்றுவர அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் போதையில் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பெருகும் இடையூறு ஏற்படுகிறது‌.

இது குறித்து காவல்துறையினருக்கு புகாரின்பேரில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனித் தலைமையில் தனிப்படை போலீசார் பொது இடங்களில் மது அருந்திக் கொண்டிருந்த 60 பேர் கைது செய்யப்படனர்.

குடியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும் காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கி இனிமேல் இதுபோன்ற செயல்களை செய்தால் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare