திருத்தணி அருகே 55 கிலோ குட்கா கடத்தியவர் கைது

திருத்தணி அருகே 55 கிலோ குட்கா கடத்தியவர் கைது
X

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருத்தணி அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 55 கிலோ குட்கா போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் தேசிய நெடுஞ்சாலை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரக்கோணம் அடுத்த தணிகைபோளூரை சேர்ந்த நீலகண்டன் 39, என்பவர் அரக்கோணத்தில் இருந்து திருவாலங்காடு வழியாக ராமஞ்சேரியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பெயரில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 55 கிலோ எடை கொண்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுப்பட்ட நீலகண்டன் என்பவரை கனகம்மாசத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி