சொகுசு கார்- கண்டெய்னர் லாரி மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

சொகுசு கார்- கண்டெய்னர் லாரி மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
X

விபத்தில் சிக்கியவர்களை  மீட்கும் பணி நடந்தது.

திருத்தணி அருகே சொகுசு கார் -கண்டெய்னர் லாரி மோதிக்கொண்ட கோர விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.

திருத்தணி அருகே சொகுசு கார் -கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ராமஞ்சேரி கிராமப் பகுதி அருகே உள்ள சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஆந்திராவிலிருந்து 7 கல்லூரி மாணவர்கள் சொகுசு காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் சென்னை வானகரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு சரக்கு ஏற்றி கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

எதிர்பாராத விதமாக சொகுசு காரும் கண்டெய்னர் லாரியும் கண் இமைக்கும் நேரத்தில் பலமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கின. இந்த விபத்தை நேரில் பார்த்த அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது அதில் பயணித்தவர்கள் சிலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு உடனடியாக கணக்கம்மா சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காரில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பளம் போல் நொறுங்கியதால் காரில் இருந்தவர்களை மீட்கும் பணி மிகவும் கடினமாக இருந்தது. பின்னர் கடப்பாரை மற்றும் பலத்த கம்பிகளை கொண்டு நொறுங்கிய பகுதிகளை நீக்கிவிட்டு உள்ளே சிக்கிக் கொண்டவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் காருக்குள் பயணம் செய்த 7 பேரில் 5 பேரை சடலமாக மீட்டனர். படுகாயம் அடைந்த 2 பேரை 108 ஆம்புலன்ஸ் வரவைத்து சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமான லாரி ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை- திருப்பதி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒரே காரில் பயணம் செய்த 5 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது