திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது

திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது
X

கஞ்சா கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட மூவர்.

திருத்தணி அருகே ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு 22 கிலோ கஞ்சா கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி அருகே தமிழக எல்லையில் போலீஸ் சோதனை சாவடி வழியாக ஆந்திராவிலிருந்து 22 கிலோ கஞ்சா கடத்தி வந்த மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இரண்டு இரு சக்கர வாகனத்தையும் மத்திய உளவுத்துறை பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையில் உள்ள பொன்பாடி போலீஸ் சோதனைச் சாவடியில் மத்திய படை உளவுத்துறை சென்னை பிரிவு ஆய்வாளர் அன்பரசி தலைமையிலான போலீசார் ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களை கடுமையான முறையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை மடக்கி சோதனை செய்யும் பொழுது அவர்கள் வைத்திருந்த பைகளில் கஞ்சா மறைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

திருத்தணி ஆர்.கே. பேட்டை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமியிடம் குற்றவாளிளையும் ,அவர்கள் கடத்தி வந்த 22 கிலோ எடையுள்ள கஞ்சாவை மற்றும் கஞ்சா கடத்தி வர பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஒப்படைத்தனர்.

இதன் அடிப்படையில் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன்( வயது 42), வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த பிரவீன்( வயது 25), மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கட்( வயது 23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு