திருத்தணி அருகே காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

திருத்தணி அருகே காரில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட சத்ராராம்,  ரமேஷ்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ஹான்ஸ் புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது.

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் பேருந்து நிலையம் அருகில் உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் 17 கிலோ எடைக்கொண்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ஹான்ஸ் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து காருடன் போதை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், திருவள்ளூரை சேர்ந்த சத்ரா ராம்(32), அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்