ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், எழுத்தர் கைது..!

ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், எழுத்தர்  கைது..!
X

கைது செய்யப்பட்டவர்கள் 

திருத்தணி அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூபாய் 10,000லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், எழுத்தர் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை சார்பதிவாளர் அலுவலர் பத்திரம் வழங்க ரூபாய் 10,000 லஞ்சப் பணத்தை எழுத்தர் பெறும் பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கையும் களவுமாகபிடித்து கைது செய்து சிறையில் அடைப்பு.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக பணியாற்றி வருபவர் சிவலோகநாதன் இவரிடம் ஆர் ஜே கண்டிகை கிராமம் விநாயகர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் என்பவரின் மகன் பழனி( வயது60). மற்றும் இவரது அண்ணன் வீராசாமி ஆகியோர் தங்களது இரண்டு ஏக்கர் நிலத்தை மேற்கண்ட நபர்களின் மகன்களுக்கு பாகப்பிரிவினை செய்து கொள்ளத் திட்டமிட்டனர். இதனை வீராசாமிக்கு3 மகன்கள் மற்றும் பழனியின் 2 மகன்கள் ஆகிய 5 பேருக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து 2 ஏக்கர் நிலத்தை பிரித்து பத்திரம் செய்திட எழுத்தர் ஆறுமுகம் மூலமாக சார் பதிவாளர் இடம் பத்திரம் செய்து வழங்குமாறு கடந்த ஜூன் 21 ஆம் தேதி விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்தினை ஏற்ற ரசீதும் பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் விண்ணப்பித்த அண்ணன் தம்பி இருவரில் அண்ணன் வீராசாமி உயிரிழந்தார். இது குறித்து கடந்த மாதம் 31ஆம் தேதி மீண்டும் சார் பதிவாளர் சிவலோக நாதனை அணுகிய பழனி ரசீதை காண்பித்து பாகப்பிரிவினை பத்திரம் வழங்குமாறு கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த (பொறுப்பு) சார்பதிவாளர் சிவலோகநாதன் இந்த பாகப்பிரிவினை செய்யப்பட்ட பத்திரங்களை வழங்க வேண்டும் என்றால் ரூபாய் 10 ஆயிரம் வழங்கினால் மட்டுமே பத்திரம் கிடைக்கும் என்று பழனி இடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத பழனி திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழரசி, மாலா மற்றும் போலீசார் அறிவுறுத்தலின் பெயரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பத்திரப்பதிவு எழுத்தர் ஆறுமுகத்திடம் ரூபாய் 10 ஆயிரத்தை பழனி வழங்கி உள்ளார்.

இதனை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த போலீசார் திடீரென சார் பதிவாளர் சிவலோகநாதனையும், எழுத்தர் ஆறுமுகத்தையும் கையும் களவுமாக பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!