திருவள்ளூர் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

திருவள்ளூர் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

ஆந்திராவிற்கு கடத்த இருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து ஒரு நபரை கைது செய்தனர் .

திருவள்ளூரில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருவள்ளூர் மாவட்ட குடிமை குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை பிரதான சாலையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூரிலிருந்து வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். ஆட்டோவில் சுமார் 1 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரை விசாரணை செய்ததில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மிட்டா, கொத்தப்பள்ளியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் யுவராஜ், 32, என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் போலீசார் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!