திருத்தணி: பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து-10 பேர் படுகாயம்

திருத்தணி: பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து சாலை  தடுப்பு சுவரில் மோதி விபத்து-10 பேர் படுகாயம்
X
திருத்தணியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் நிறுவனப் பேருந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

திருத்தணியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் நிறுவனப் பேருந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து; இதில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தனியார் நிறுவன தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கம்பெனி பஸ் இன்று அதிகாலை அரக்கோணம் வழியாக பெரும்புதூர் நோக்கி சென்றது. அரக்கோணம் ரயில்வே உயர் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென நிலை தடுமாறிய பஸ், சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர்.

உடனே அவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!