மாமண்டூர் பிரதான எல்லையம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேக விழா

மாமண்டூர் பிரதான எல்லையம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேக விழா
X

மாமண்டூர் பிரதான எல்லையம்மன் ஆலயம்

மாமண்டூர் கிராமத்தில் பிரதான எல்லையம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் பிரதான எல்லையம்மன் ஆலயம் கிராம மக்கள் நிதி உதவியுடன் புதியதாக கலை நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு ஹோமகுண்டம் பூஜைகள் நடைபெற்றது.

இன்று காலை மகா கும்பாபிஷேக பூஜைகள் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கலச புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்திற்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது. அப்போது கோயிலை சுற்றியுள்ள கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஓம் சக்தி முழக்கங்களுடன் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

இதையடுத்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இத்திருகோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story