திருத்தணி : பணிகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் -சமூக விலகல் இன்றி முண்டியடித்த கூட்டம்
![திருத்தணி : பணிகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் -சமூக விலகல் இன்றி முண்டியடித்த கூட்டம் திருத்தணி : பணிகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் -சமூக விலகல் இன்றி முண்டியடித்த கூட்டம்](https://www.nativenews.in/h-upload/2021/07/13/1174587-img-20210714-wa0002.webp)
திருத்தணி முருகன் கோயிலில் அர்ச்சகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் நடைபெற்றது.
விண்ணப்பத்தைப் பெற கூட்டம் முண்டியடித்துக் கொண்டு சமூக விலகளை கடைபிடிக்காமல் வாங்கியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் அர்ச்சகர், அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இன்று விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனைப் பெற ஏராளமானோர் குவிந்து சமூக விலைகளை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு மனுக்களை பெற்றதால் அங்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை வருகின்ற ஆகஸ்ட் மாதம் வரை பெற கால அவகாசம் உள்ள நிலையிலும், பொதுமக்கள் இன்று முந்தி அடித்துக்கொண்டு மனுக்களைப் பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கோவிலில் ஊழியர்கள் மரத்தடியில் அமர்ந்து டோக்கன்களை வழங்கியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் தற்போது தொற்றுநோய் பரவாமல் குறைந்துள்ள நிலையில் இதுபோன்று சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நிற்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu