தடுப்பூசி போடுங்க... மிக்கி மவுஸ் உடையில் கொரோனா விழிப்புணர்வு!

திருத்தணியில், மிக்கி மவுஸ் உடையணிந்து முகக்கவசம், கொரொனா தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, தன்னார்வலர்கள் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பேருந்து நிலையம் மற்றும் பஜார் வீதி ஆகிய பகுதிகளில், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, தன்னார்வலர்கள் மிக்கி மவுஸ் உடை அணிந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சாலையில் நடந்து செல்பவர்கள், பூ வியாபாரம் செய்யும் பெண்கள், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் என அனைவரிடமும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முகக்கவசத்தை பாக்கெட்டில் வைத்திருந்தாலோ அல்லது பையில் வைத்திருந்தாலோ அதனை எடுத்து முகத்தில் போடும் வரை , அவர்கள் கலாட்டா செய்வதுபோல் வித்தியாசமான முறையில் அவர்களை அணுகி, முகக்கவசத்தை அணிய செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!