பள்ளிகள் திறப்பு- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பள்ளிகள் திறப்பு- மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியம், அமிர்தாபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி ஆகிய பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று மாணவர்களின் வருகை, உடல் வெப்பநிலை பரிசோதனை, கைகளில் தடவக்கூடிய கிருமிநாசினிகள் வழங்கப்படுவது உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story
ai solutions for small business