மாணவர்களை திருத்த அவர்கள் முடியை திருத்தி தலைமை ஆசிரியர் அதிரடி

மாணவர்களை திருத்த அவர்கள் முடியை திருத்தி தலைமை ஆசிரியர் அதிரடி
X

மாணவர்களுக்கு பள்ளியிலேயே முடிதிருத்தம் 

திருவள்ளூரில் பள்ளி வளாகத்தில் வைத்து மாணவர்களுக்கு முடித் திருத்தம் செய்யவைத்த பள்ளித் தலைமை ஆசிரியர்.

அண்மைக்காலமாக மாணவர்கள் பள்ளி வளாகங்களில் ஆசிரியர்களை தாக்குவது, சக மாணவர்களை ராகிங் செய்வது, நாற்காலிகளை உடைத்தெறிவது என வரம்பு மீறி அத்துமீறி வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் உயரிய ஒழுக்கத்துடன் திகழ வேண்டும் என்பதற்காக சீருடை தொடங்கி சிகை அலங்காரம் வரை கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் எப்போதும் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் இன்ன விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உண்டு.

இன்றைய கால கட்டங்களில் குறிப்பாக பள்ளி மாணவர்களின் சிகை அலங்காரம் முதல் சீருடை வரை நவீன காலத்திற்கு ஏற்ப வடிவம் மாறி இருக்கின்றது. ஆனால் பள்ளி வளாகத்திற்கு ஏற்ப அவை இருக்கின்றதா என்றால் இல்லை என்பதே உண்மை

இந்த நிலையில்தான் திருவள்ளூர் மாவட்டம் அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் அருணன் முறையாக சிகை அலங்காரம் செய்து கொள்ளாத மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திற்கு முடி திருத்துபவரை வரவைத்து சம்மர் கட்டிங் அடிக்க வைத்துள்ளார்.

தங்கள் இஷ்டத்திற்கு ஏற்ப மாணவர்கள் சிகை அலங்காரம் செய்து வருவதை கண்டிக்காமல் விடுவதால் அடுத்தடுத்து அவர்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தாமல் பயப்படாமல் வரம்பு மீறி செயல்பட தொடங்குவதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

தங்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள் ஐயா!

இதனை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு மற்ற பள்ளிகளிலும் இது போன்ற முயற்சி மேற்கொண்டால் ஒழுக்கமான மாணவர் சமுதாயத்தை உருவாக்கலாம்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!