முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு-ஆவணங்கள் அடிப்படையிலேயே விசாரணை

முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு-ஆவணங்கள் அடிப்படையிலேயே விசாரணை
X

அமைச்சர் ஆவடி நா.மு.நாசர்

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு-ஆவணங்கள் அடிப்படையிலேயே விசாரணை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்தார்.

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு-ஆவணங்கள் அடிப்படையிலேயே விசாரணை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்தார்.

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான விசாரணையில் ஆவணங்கள் காணாமல் போனதாக தெரிவிப்பது தவறான தகவல் என தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக, 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 2007 தொழிலாளர்களுக்கு ரூ.47.32 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிக்கான தொகைகளை வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்தார்.

திருவள்ளுர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக, 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 2007 தொழிலாளர்களுக்கு ரூ.47.32 இலட்சம் மதிப்பில் திருமணம், மகப்பேறு, கல்வி, கண்கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிக்கான தொகைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்க பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு வழங்கினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, முன்னாள் முதலமைச்சர் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியதன் மூலம், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னனி மாநிலமாக திகழ்கிறது.

இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற 50 நாட்களில் 50,000 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையில் முக்கிய ஆணவங்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறதே என கேட்டதற்கு, அது தவறான தகவல் என்றும், அந்த ஆவணங்கள் அடிப்படையிலேயே விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!