ஆரணி ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆரணி ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட மணல்.

ஆரணி ஆற்றில் மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மாட்டுவண்டி உரிமையாளர்கள் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அரியபாக்கம் பகுதியில் ஆரணி ஆறு செல்கிறது. இப்பகுதியில் உள்ள தடுப்பணை அருகே சிலர் மாட்டு வண்டிகள் மூலம் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் கடத்தி வருவதாக பெரியபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் தரணிஈஸ்வரி மற்றும் போலீசார் திடீரென ஆரணியாற்றில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிகாலை வேளையில் இரண்டு மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளையர்கள் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அங்கு போலீசார் சென்றதும் அவர்களை பார்த்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் வண்டிகளை ஆற்றிலே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய மாட்டுவண்டியில் உரிமையாளர்களை தேடி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் கூறுகையில், ஆரணியாறு பகுதியில் ஒரு மாத காலமாக தொடர்ந்து மணல் கடத்தல் அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கும் வருவாய் துறையினருக்கு தெரிவித்தும், கண்டுகொள்ளாமல் செல்வதாகவும் தடுப்பணை அருகே மணல் எடுப்பதால் தடுப்பணை பலவீனம் அடையும் அபாயம் உருவாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil