ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
சென்னை பூந்தமல்லி அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டார். உடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன் திரு.வி.க.சட்டமன்ற உறுப்பினர் திரு.தாயகம்கவி மற்றும் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ஜெயராமன் உள்ளனர்.
சென்னை பூந்தமல்லி அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான மேல்நிலைப்பள்ளியில் ரூ.86 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்தஆய்வின்போது இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தாதவது, காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 141 கிரவுண்ட் நிலத்தில் பள்ளிக் கட்டடங்களுடன் கூடிய 32 கிரவுண்ட் இடம் தனியார் நிர்வாகத்திடமிருந்து திருக்கோயில் நிர்வாகத்திற்கு சுவாதீனம் பெறப்பட்டது. தற்போது ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பள்ளியில் ஏற்கனவே 649 மாணவ, மாணவியர்கள் மட்டுமே சேர்க்கை பெற்றிருந்தார்கள். தற்பொழுது திருக்கோயில் நிர்வாக கட்டுப்பாட்டிற்கு வந்தபிறகு மாணவ, மாணவிகளின் சேர்க்கை 830 ஆக உயர்ந்துள்ளது.
மாணவ, மாணவிகளுக்காக விளையாட்டு மைதானம் அமைத்து அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்கி கொடுக்கப்படும். பள்ளி வளாகத்தை சுற்றி மதில்சுவர் அமைத்து அதில் ஆன்மிகம் சம்பந்தமான புகைப்படங்கள், புராதான சின்னங்கள் வரையப்படும். முகப்பில் திருக்கோயில் தோற்றம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் விரைவில் தயார் செய்து பணிகள் சிறப்பாக நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், திரு.வி.க.சட்டமன்ற உறுப்பினர் தாயகம்கவி மற்றும் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ஜெயராமன் பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா கௌரி, திருக்கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu