பல் குத்தும் குச்சியால் கலைப்பொருட்களை வடிவமைத்து இளைஞர் சாதனை

பல் குத்தும் குச்சியால் கலைப்பொருட்களை வடிவமைத்து இளைஞர் சாதனை
X

கலைப்பாெருட்கள் கண்காட்சியை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பழவேற்காட்டில் பல் குத்தும் குச்சி, ஐஸ் குச்சிகளால் செய்யப்பட்ட கலைப்பொருட்களின் தத்ரூபமான பொருட்களின் கண்காட்சி.

பழவேற்காட்டில் பல்குத்தும் குச்சி, ஐஸ் குச்சிகளால் செய்யப்பட்ட தத்ரூபமான பொருட்களின் கண்காட்சி. கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இளைஞரை பாராட்டிய சட்டமன்ற உறுப்பினர். தனித்திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக 5ஆண்டுகளாக போராடி வரும் இளைஞர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த நடுவூர் மாதாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பினோசாஜன் (24). இவர் சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி வேதியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். வழக்கம்போல ஏதேனும் ஒரு வேலையில் சென்று சேர விருப்பம் இல்லாத பினோசாஜன் தனித்தன்மையுடன் தமது திறமையை வெளிக்கொணர முடிவு செய்தார். ஐஸ் குச்சிகள், பல் குத்தும் குச்சிகளை கொண்டு சிறிய சிறிய பொருட்களை பினோசாஜன் செய்ய தொடங்கினார். நாளடைவில் இணையத்தில் பல்வேறு செயல்முறை விளக்கங்களை பார்த்து கைவினை பொருட்களை செய்யும் முயற்சியில் இறங்கினார்.

உலக அதிசயங்களான தாஜ்மஹால், பைசா நகர் சாய்ந்த கோபுரம், ஐஃபில் டவர், லண்டன் டவர் பிரிட்ஜ், தேவாலயம், ரயில், மெக்கா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த கட்டிடங்களை இரவு பகலாக பல ஆண்டுகளாக முயன்று தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். ஐஸ் குச்சிகள், பல் குத்தும் குச்சிகளை மட்டுமே கொண்டு முழுக்க முழுக்க மரத்திலான உருவங்களை கண்கவரும் வகையில் வடிவமைத்துள்ளார். இந்த தத்துரூப வடிவங்களை மக்களின் பார்வைக்காக பழவேற்காடு கடற்கரையை ஒட்டி லைட்அவுஸ் அருகில் கண்காட்சி அமைத்துள்ளார். இந்த கண்காட்சியினை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள படைப்புகளை கண்டு இளைஞரின் அசாத்திய திறமையை பாராட்டினார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட விடுமுறை தினங்கள் தொடர்ந்து வரவுள்ள நிலையில் 1மாதத்திற்கு இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இளைஞர் பினோஷாஜன் கூறுகையில் தனித்துவமான வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும், சுமார் 5ஆண்டுகளாக ஒவ்வொரு வடிவமாக உருவாக்கியதாக தெரிவித்தார். படைப்புகளுக்கு ஏற்றார் போல பல் குத்தும் குச்சிகளை கொண்டு 1வாரம் முதல் 7மாதம் வரை எடுத்து கொண்டு தத்ரூபமாக வடிவமைத்ததாக தெரிவித்தார்.

கண்காட்சியாக மட்டுமே வைக்காமல் தமது படைப்புகள் நடமாடும் அருங்காட்சியமாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் பணியாற்றி வருவதாக தெரிவிக்கிறார். 5ஆண்டுகளாக தமது திறமையை உலகிற்கு வெளிக்காட்ட தொடர்ந்து போராடி கண்காட்சியை அமைத்துள்ள பினோஷாஜன் படைப்புகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!