தூங்கும் போது பாம்பு கடித்து இளம் பெண் பலி!

தூங்கும் போது பாம்பு கடித்து இளம் பெண் பலி!
X
பொன்னேரி அருகே வீட்டில் தூங்கும் போது பாம்பு கடித்து இளம் பெண் செவிலியர் உயிரிழந்தார்.

பொன்னேரி அருகே வீட்டில் தூங்கும் போது பாம்பு கடித்து இளம் பெண் செவிலியர் உயிரிழப்பு. சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பகுதியை சேர்ந்தவர் பார்கவி (23). இவர் செவிலியர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு மாதர்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

அதிகாலை பார்கவி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பார்கவி சிறிது நேரத்திற்கு பிறகு தம்மை ஏதோ கடித்ததால் வாயில் நுரை தள்ளுகிறது என கூச்சலிட்டார். அலறிய சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பார்கவியை கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பார்கவி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து பார்கவியின் சடலம் ஸ்டான்லி மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண் செவிலியர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்