பொன்னேரி: புதுமண தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை

பொன்னேரி:  புதுமண தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட தம்பதி.

பொன்னேரி அருகே, திருமணமாகி 8. மாதங்களில் கணவன் மனைவி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காஞ்சிவாயல் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டரான தங்கமணி. இவருக்கும், உறவினரான அபிநயாவுக்கும் கடந்த 8மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. கடந்த 28ம் தேதி வயிற்று வலி காரணமாக அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அபிநயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாக மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இருந்து வந்த கணவன் தங்கமணி, கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயிற்று வலி காரணமாக மனைவியும், மனைவியை பிரிந்த துக்கம் தாங்காமல் கணவன் என இருவரும் அடுத்தடுத்து இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!