திருத்தணி முருகன் கோவிலுக்கு, பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு

திருத்தணி முருகன் கோவிலுக்கு, பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
X

திருவெள்ளைவாயல் கிராமத்தில், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில், திருத்தணி முருகனுக்கு அலகு குத்தி வழிபாடு நடந்தது.

திருவெள்ளைவாயல் கிராமத்தில், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகனுக்கு அலகு குத்தி வழிபாடு நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகனுக்கு அலகுகுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியானது, ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் வருடாந்திர அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், திருத்தணி முருகனுக்கு அலகுகுத்தி வழிபாடு கடந்த 35 ஆண்டுகளாக செய்து வருவது வழக்கம். அதேபோன்று இந்த வருடம் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வழிபாடு நிகழ்ச்சி, நேற்று திருக்கோவிலின் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கோவிலின் அறங்காவலர் வேலாயுதம் சாமியார் தலைமை வகித்தார், இருதயசாமி, ராஜா, ஆறுமுகம்,கார்த்திக், வடிவேல்,பொன்னுரங்கம், உள்ளிட்டவர்களின் முன்னிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை விரதம் இருந்து உடலில் அலகு குத்தினர். பம்பை உடுக்கை மேளங்கள் முழங்க, பல்வேறு வாகனங்களில் தொங்கியபடியும் , இளநீர், வாகனங்களை இழுத்துக் கொண்டு ஊர்வலமாக வலம் வந்தனர். அப்பகுதியில் உள்ள சிவன் கோவிலில், ஊர்வலத்தை நிறைவு செய்தனர்,அதனைத் தொடர்ந்து திருத்தணி முருகனுக்கு காவடி எடுத்து, நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள், மற்றும் கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story