பொன்னேரி அரசு மருத்துவமனையில் உலக மருத்துவர் தினம் கொண்டாட்டம்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் உலக மருத்துவர் தினம் கொண்டாட்டம்
X

பொன்னேரி அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.

பொன்னேரி அரசு மருத்துவமனையில் உலக மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.

உலகம் முழுவதும் பி.சி. ராயின் நினைவைப் போற்றும் விதமாக அவரது பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது. ராய்க்கு புகழாரம் சூட்டும் வகையில், 1991ஆம் ஆண்டு முதல் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் லயன்ஸ் கிளப் சார்பில் அங்கு பணி புரியும் மருத்துவர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கி உயிர் காக்கும் சேவையை பாராட்டி நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!