பொன்னேரி அருகே தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

பொன்னேரி அருகே தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
X

குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

சோழவரம் அருகே தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை கேட்டு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி அடுத்த இருளிபட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்ச்சலையில் பணிபுரியும் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கோடு செயல்படும் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலையின் முன்பாக 500, க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் கைக்குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சி இருளிபட்டில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் சுமார் 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை சலுகைகளான ஊதிய உயர்வு, மருத்துவ சலுகைகள், பயணப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சாலை நிர்வாகத்திடம் பலமுறை கேட்டுள்ளனர்.

இந்த சலுகைகளை பத்தாண்டு காலமாக கேட்டு வந்தும் தொழிற்சாலை நிர்வாகம் கண்டு கொள்ளாத காரணத்தினால் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் தங்களை இணைத்து கிளை சங்கத்தை துவக்கி உள்ளனர்.

உடனே தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களை சிஐடியு சங்கத்திலிருந்து வெளியேறும் படியும் அப்போதுதான் தாங்கள் கேட்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர். பின்னர் இதற்கான பழிவாங்கும் செயலாக தொழிலாளர்களின் மீது பல்வேறு குற்றங்களை சுமத்தி தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளனர்.


இதில் நான்கு தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்த காரணத்தினால் இந்த பழிவாங்கும் போக்கை கண்டித்து தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 120 தொழிலாளர்களும் அவருடைய குடும்பத்தினரும் என மொத்தம் 500 க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக தமிழக அரசு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து தொழிலாளர்கள் தெரிவிக்கையில் இந்த தொழிற்சாலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகவே பணியாற்றி வருவதாகவும் தங்களுக்கு தற்போது வரை தொழிற்சாலை சார்பில் ஊதிய உயர்வு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொழிற்சாலை தரப்பில் செய்து தரப்படவில்லை என்றும், இதுகுறித்து பலமுறை தொழிற்சாலை நிர்வாகத்திடம் கலந்து பேசும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் எனவே இதற்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு