பொன்னேரி நகராட்சியில் மகளிர் தின விழா
மகளிர் தின விழாவில் கேக் வெட்டி கொண்டாடிய காட்சி.
தமிழ்நாடு தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பொன்னேரி நகராட்சியில் மகளிர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஞானசெல்வி தலைமையில் தலைமை வகித்தார் . இதில் ரெவெரென்ட் பாஸ்டர் லாரன்ஸ் ஜான் மற்றும் நேஷனல் கிறிஸ்டியன் போர்டு தமிழ்நாடு வைஸ் சேர்மன் ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், பொன்னேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திலகவதி, பொன்னேரி கிளையின் கனரா வங்கியின் மேலாளர் ஜெனிபர், டிவிஎஸ் ரெட்டி மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் ரஞ்சிதம், மற்றும் பொன்னேரி நகராட்சியின் கூட்டுறவு வங்கியின் உடன் ஊழியர் தனலட்சுமி மற்றும் பொன்னேரி நகராட்சி மன்ற 21 வது வார்டு உறுப்பினர் தமிழ் குடிமகன், அரசு கல்லூரி மகளிர்கள் அனைத்து வார்டு உறுப்பினர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு மகளிர் தின விழா நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu